வீட்டு பராமரிப்பு

முதியோர்களுக்கான வீட்டு பராமரிப்பு சேவைகள் ஏன்?

வீட்டில் வழங்கப்படும் பராமரிப்பு சேவைகள் வீட்டிலேயே பராமரிப்பு என்று அழைக்கப்படுகிறது. வீட்டிலுள்ள பராமரிப்பில் பராமரிப்பு சேவைகளை வயதானவர்களுக்கு எங்கள் செல்லம் எல்டெர் கேர் சப்போர்ட்டரால் வழங்கப்படுறது.

தங்களுக்கான மருத்துவ வசதியோ மற்ற தேவைகளுக்கான உதவியோ எதிர்பார்த்து சொந்த வீட்டில் இருந்து வேறு இடத்திற்கு குடியேற யோசிக்கும் வயதான பெரியவர்கள்(ஆணோ, பெண்ணோ ) எங்கள் சேவையை பயன்படுத்துவதன் மூலம் சொந்த வீட்டிலேயயே நீண்ட நாள் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழலாம்.

எங்கள் வீட்டு பராமரிப்பு சேவைகள்

வீட்டு பராமரிப்பு

ஒரு வீட்டை சீராக நடத்துவதற்கு நிறைய வேலை தேவைப்படுகிறது. நீங்கள் தொடர்ந்து பராமரிப்பது கடினமாக உணர்ந்தால், சலவை செய்வது, கடைகளுக்கு சென்று வருவது, தோட்டம் மற்றும் வீட்டை பராமரிப்பது, மேலும் சிறு சிறு பிற வேலைகளுக்கான உதவியாளர்கள் என பல சேவைகளை பெறலாம்.

நீங்கள் பெறும் உதவிகள் மருத்துவ சந்திப்புகள் உணவு மற்றும் ஆரோக்கிய பராமரிப்புகள் உங்களுக்கு அதிக செலவீனங்களை தருகிறது என்றால் எங்கள் சேவை உங்களுக்கு பேருதவியாக இருக்கும்.

தனிப்பட்ட பராமரிப்பு (படுக்கையில் இருப்பவர் பராமரிப்பு )

அன்றாட அடிப்படை தேவைகளான உடை மாற்றுதல், குளித்தல், கழிவறை செல்ல உதவுவது தனிப்பட்ட பராமரிப்பு அல்லது தனிக்கவனம் தேவைப்படும் பராமரிப்பு என்று அழைக்கப்படுகிறது. எங்கள் செல்லம் எல்டெர் கேர் உதவியாளர் ஓரிரு மணிநேரங்கள் முதல் 24 மணி நேரமும் தேவைக்கேற்ப சேவைகளை வழங்குவார்கள்.

  • இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவை சோதித்தல்.
  • இயலாதவற்கு ஊட்டி விடுதல்.
  • படுக்கையில் இருந்து எழுந்து உட்காரவும், நாற்காலிகள் பயன்படுத்தவும், நடக்கவும் உதவுதல்.
  • பல் துலக்க, குளிக்க மற்றும் உடல் சுத்தம் செய்ய உதவுவது.
  • உடை மாற்ற உதவுவது.
  • சிகை அலங்காரம் மற்றும் தேவையான தனித்துவமான உதவிகளை செய்வது.
  • கழிவறை செல்ல உதவுவது.
  • மருந்துகள் வாங்குவது மற்றும் நேரத்தோடு நினைவூட்டி வழங்குவதுடன் சுவையுடன் கூடிய சத்தான உணவு வழங்குவது.
  • ஆவி பிடித்தல், இலகுவான உடற்பயிற்சி மற்றும் மருத்துவர்கள் ஆலோசனை படியான எண்ணெய் போடுதல், ஒத்தடம் போன்ற ஆரோக்கியத்தை மீட்டு எடுப்பதற்கான அனைத்து உதவிகளையும் அன்போடும் அக்கறையோடும் செல்லம் எல்டெர் கேர் சேவையாளர்கள் செய்கிறார்கள்.

மருத்துவ ஆலோசனை

மருத்துவ ஆலோசனை என்பது ஒரு குறிப்பிட்ட நபர் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க அல்லது பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் அல்லது செய்யக்கூடாது என்பது குறித்த முறையான தொழில்முறை கருத்தை வழங்குவதாகும். பொதுவாக, மருத்துவ ஆலோசனையில் ஒரு நோயறிதலைக் கொடுப்பது மற்றும் / அல்லது மருத்துவ நிலைக்கு ஒரு சிகிச்சையை பரிந்துரைப்பது ஆகியவை அடங்கும்.