மருத்துவம்

எங்கள் மருத்துவ சேவை ஏன்?

சுதந்திரமாக வாழ விரும்பும் மூத்த குடிமக்கள்ஆரோக்கியம் சார்ந்த உதவிகள் தேவைப்படும் போது அல்லது எதிர்பார்க்கும் போது எங்கள் எல்டெர் கேர் சேவையை பயன்படுத்தலாம். அதன் மூலம் தங்கள் தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம்.தனிநபர்களின் தேவைகளைப் பொறுத்து பலவிதமான வீட்டு சுகாதார சேவைகளை நாங்கள் வழங்குகிறோம்.மேலும் எல்டர்கேரை முழுநேர, பகுதிநேர அல்லது ஒரு சில மணி நேரங்கள் அடிப்படையில் தேவைக்கேற்ப பயன்படுத்தலாம்.குளித்தல், உடை மாற்றுதல், நடமாடுதல் மற்றும் படுக்கை சீர்படுத்துதல் போன்ற விரிவான மருத்துவ பராமரிப்பு சேவைகளை செல்லம் எல்டெர் கேர் செய்கிறது.

பெரியவர்களுக்கு சேவை செய்வது ஒரு ஆசீர்வாதம். இது பொருளாதார எதிர்பார்ப்பை அடிப்படையாக கொண்டதல்ல, உண்மையிலேயே அக்கறை செலுத்துவதாகும். மேலும் பெரியவர்களுக்கும் சேவை வழங்குவர்க்கும் இடையில் ஒரு வலுவான பிணைப்பை ஏற்படுத்தும் வகையில் கவனமாக கட்டமைக்க பட்டதாகும். இது ஒரு மகிழ்ச்சியான மற்றும் பாதுகாப்பான சூழலை உருவாக்குவது பற்றியது.

வயது இங்கே ஒரு எண் மட்டுமே!

நீங்கள் எங்கள் சேவை பெறுவதற்கு வயது ஒரு தடையே இல்லை.

அன்புக்குரியவர்களை சந்தோசமாக உணர வைப்பதே எங்கள் நோக்கம்.

எங்கள் நிறுவனம் சமூகத்தில் நம்பிக்கையும் நற்பெயரும் கொண்ட சிறந்த நம்பிக்கைக்குரிய நிறுவனமாகும். தங்கள் பிள்ளைகள் தொலைவிலோ அல்லது வெளிநாட்டிலோ வசிக்கும் போது கூட பொற்றோர்கள் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள் என்பதை உறுதி செய்கிறது.

மருத்துவ ஆலோசனை வழங்குதல்

எங்கள் அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் மருத்துவ உதவிக்குறிப்புகளை வழங்குவார்கள்.

உங்கள் மன, உடல், பொருளாதார நிலைக்கு ஏற்ப உங்கள் சுற்றியுள்ள நம்பகமான மருத்துவமனை பற்றி பரிந்துரைத்தல்.

பிரபல மற்றும் சிறப்பு மருத்துவர்கள் விவரங்கள் தெரியப்படுத்துதல்.

குறைந்த விலையில் மருந்து வாங்கக்கூடிய இடத்தை அறிமுகம் செய்தல்.

அதிக விலை மருந்துக்கு பதிலாக எந்த குறைந்த விலை மருந்து சமம் என்பதை பரிந்துரைப்பது.

உங்கள் குடும்ப மருத்துவரின் ஆலோசனையின் படி உங்கள் வழக்கமான மருத்துவ நடவடிக்கைகளை கண்காணிக்கவும்.

மருத்துவமனை வாழ்க்கையைத் தவிர்க்க எந்த வகை உணவு அல்லது வாழ்க்கை முறை சிறந்தது என்பதும், தைரியமாக வயதான உடல்நலப் பிரச்சினைகளை எவ்வாறு எதிர்கொள்ள முடியும் என்பதற்கு வழிகாட்டுவது போன்றவை எங்கள் சேவைகளில் அடங்கும்.