எங்களை பற்றி

“ஒரு முறை உங்களைப் பராமரித்தவர்களைப் பராமரிப்பது மிக உயர்ந்த மரியாதை”

என் வாழ்க்கையின் முன்னேற்த்திற்கான என் பயணத்தில், நான் வெளி நாட்டில் இருந்த போது ஊரில் தனிமையில் இருந்த என் அம்மா தன் அன்றாட தேவைகளுக்கு கூட என் உதவி கிடைக்காமல் சிரமபட்டது தான் இச்சேவைக்கு வித்தாக அமைந்தது.

பல ஆண்டுகளாக நான் சந்தித்த பெரியவர்களும் என்னில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினர். உலகில் உள்ள அனைத்து செல்வங்களையும் வாங்கக் கூடிய வயதானவர்கள் கூட இருக்கிறார்கள், ஆனால் முறையான கவனிப்பாளரைக் காணவில்லை, அவர்கள் தங்கள் ஆரோக்கியத்தை அன்புடனும் இரக்கத்துடனும் கவனித்துக் கொள்ள உதவும் சேவை மனப்பாண்மையுள்ள மனிதர்களை தேடுகிறார்கள் என்ற புரிதலே, இந்த மூத்த குடிமக்களுக்கு சேவை செய்வதற்கான ஒரு யோசனையை எனக்குக் கொண்டு வந்தது, மேலும் குறைந்த கட்டணத்தில் மற்றும் சிறந்த தரமான பராமரிப்புடன் முறையான அமைப்பின் மூலம் வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவ உருவாக்கப்பட்டதுதான் செல்லம் எல்டர் கேர்

அதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் முதன்முறையாக எங்கள் சேவையை துவங்குகிறோம் அதற்கு மாவட்ட மக்களிடமிருந்து முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கிறோம். இது எதிர்காலத்தில் அருகிலுள்ள பிற மாவட்டங்களுக்கும் விரிவாக்க ஊக்குவிக்கும்.

என்றும் சேவை  மனதோடு,

 நிறுவனர் – பிரசன்ன குமார்

நாங்கள் எப்போதும் அக்கறையோடு உதவியாக இருக்க முடியும், ஆனால் உங்களால் எப்போதும் முடியாது.

வயது ஏறுவதும் முதுமையடைவதும் தவிர்க்க முடியாததுதான், ஆனால் அது கொண்டு வரும் சிரமத்தை நாம் சமாளிக்க முடியும். உங்களை அல்லது உங்கள் அன்புக்குரியவரை கவனித்துக்கொள்வதற்கு அன்பான மற்றும் நிபுணத்துவம் வாய்ந்த ஒருவர் இருந்தால் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க மாட்டீர்களா? உங்கள் வீட்டு வாசலில் புன்னகைக்கும் முகத்துடன் எப்போது வேண்டுமானாலும் உங்கள் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய நாங்கள் செல்லம் எல்டர் கேர் தயாராக இருக்கிறது

நாம் யார்?

நாங்கள் சான்றளிக்கப்பட்ட செவிலியர்கள் மற்றும் மருத்துவ ரீதியாக படித்தவர்களால் பெரியவர்கள் மற்றும் தேவைப்படும் மக்களுக்கு உணவு, பகுதி நேரம், முழு நேரம் மற்றும் மணிநேர அடிப்படையில் தேவைக்கேற்ப சேவைகளை வழங்குகிறோம்.

நாங்கள் யாரை கவனித்துக்கொள்கிறோம்?

வயதான தம்பதிகள் மற்றும் தனிமையில் இருப்பவர்.

தனித்து இயங்க இயலாதவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள்.

தனியாக வசிக்கும் வயதான ஆண்கள் / பெண்கள் தினசரி பராமரிப்பு தேவைப்படுபவர்கள் மற்றும் படுக்கையில் இருப்பவர்கள்.

தகவல் பரிமாற்றம்

பெரியவர்களின் அந்தந்த பாதுகாவலருக்கு வாட்ஸ்அப் மூலம் அவ்வப்போது தகவல்களை வழங்குகிறோம், இது அவர்கள் நலம் பற்றி அன்றாட நிலையை அறிந்து கொள்ள உதவுகிறது.

உங்களுக்காவே நாங்கள் !

உங்கள் தேவையே ! எங்கள் சேவை !