உணவு

எங்கள் வீட்டு உணவு சேவையை ஏன் பயன்படுத்த வேண்டும் ?

எங்கள்உணவு விநியோக சேவை உங்கள் வயதான அன்புக்குரியவருக்கு பல காரணங்களால் சிறந்த தேர்வாக இருக்கும்.

தேவையான ஊட்டசத்து அடங்கிய உணவுகள்

தேவைக்கேற்ற கட்டுப்பாடான சிறப்பு உணவுகள் வழங்குவது

காலம் தவறாது நேரத்தோடு வழங்குவதால் உங்கள் நேரம் சேமிக்கப்படுகிறது. உணவு வழங்குபவர் தினமும் சந்திப்பதன் மூலம் வெளி தொடர்பு ஏற்படுவதுடன் பெரியவர்களின் நலன் கண்காணிக்கப் படுகிறது.

குறைந்த கட்டணத்தில் சேவை வழங்கப்படுகிறது

உணவு வழங்குதல் சேவைகளால் முதியோருக்கான நன்மைகள்

வயதானவர்களுக்கு உணவு வழங்குதல் சேவைகளின் மிகத் தெளிவான நன்மை என்னவென்றால், நாள் முழுவதும் புதிய, சத்தான மற்றும் சூடான உணவைப் பெறுகிறார். பெரும்பாலும், ஒரு வயதான நபர் வீட்டுக்குள் முடங்கியோ அல்லது உடல்நிலை சரியில்லாமல் இருக்குமேயானால், மளிகைப்பொருள்கள் மற்றும் காய்கறிகள் வாங்கி வந்து அன்றாடம் சமைப்பது என்பது ஒரு சவால். இந்த சுமையை போக்க எங்கள் உணவு விநியோக சேவை முதியோர்களுக்கு நன்கு உதவிகரமாக இருக்கும்.

முதியோருக்கான உணவு சேவைகளின் மற்றொரு நன்மை என்னவென்றால், அவர்கள் ஒருவித சமூக தொடர்புகளை பெறுவதுடன் தங்கள் விருப்பங்களை வெளிப்படுத்த எங்கள் மூலம் வாய்ப்பு கிடைக்கிறது.

நாங்கள் ஏற்படுத்தும் கூட்டு சாப்பாடு நிகழ்ச்சிகள் மற்றும் ஒருங்கிணைப்பு கூட்டங்கள் புதிய நட்புகளை உருவாக்கி கொடுப்பதுடன் வழக்கமான தனிமையை தவிர்த்து மற்றவர்களோடு சேர்ந்து கூட்டாக சாப்பாட்டை ருசிக்கவும் வாய்ப்பளிக்கிறது.

உணவு சேவையை தேர்ந்தெடுக்கும் முன் கவனத்தில் கொள்ள வேண்டியது

உங்களுக்காக அல்லது உங்கள் வயதான அன்பானவருக்கு உணவு சேவையைத் தேர்ந்தெடுக்கும் போது, ​​மனதில் கொள்ள வேண்டிய பல விஷயங்கள் உள்ளன.

பொருளாதார நிலையைப் பொறுத்து உணவு வகைகளை தேர்வு செய்வது.

தங்கள் உடல் ஆரோக்கிய நிலையை பொறுத்து தகுந்த கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட உணவை தேர்வு செய்வது.